பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ. சண்முகம்................................................. 4

நானே துதிக்கிறேன் 

இறைவா, இறைவா, என்றன் இறைவா,
எப்படி உன்னை
ஏந்தித் தொழுதே
கைப்பிடியில் உள்ள
கற்பூரம் போல
நிறையும் மணத்தை நுகர்ந்து நுகர்ந்தே
நம்புகின்றேன்! நெகிழ்ந்தே மகிழ்கிறேன்
இறைவா, இறைவா, என்றன்தேவா..!
இம்மியேனும்
இமைப்பொழு தேனும்
தம்மில் உன்னைத்
தரிசனம் செய்யாக்
குறைமனக் குறும்பர் கொடுமை யாளர்க்காய்
குனிந்து வணங்கி நானே துதிக்கிறேன்.