இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5 .....................................................எதைத் தேடுகிறாய்..?
கட-வுள்!
அங்கே இங்கே எங்கோவென.
அதிலோ இதிலோ எதிலோவென
அலைந்தே திரியும் மானிடனே!
இங்கே இதிலே உன்னுள்ளே
இறைவன் உறையும் அதிசயத்தை
ஏனோ நீயும் அறிகிலையே!
இமைகளைத் திறந்தே அதனைப்பார்!
இளைத்துக் களைத்தே அம்மான்தான்
இப்படி அப்படி அலைவ தனை!
அமைவாய் மணக்கும் கஸ்தூரி
அம்மான் நாபியில் மறைந்திருந்தும்
அதனைஉணரத் தவறி யதே!
மேய்ச்சல் திடலை நூறுமுறை
வீணே சுற்றும் மான்போல
வெறுமனே நீயும் உழல்கின்றாய்.
காய்ச்சல் பாய்ச்சல் அற்றதொரு
கருணை வெளிச்சம் படரவிடு!
கடவுளை உன்னிலே கண்டுவிடு!