இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9 ................................................ எதைத் தேடுகிறாப்.?
இன்றாகவும்-இருக்கலாம்
<poem>இன்றே இன்றே அந்நாளாய் இருக்கும் அதிசயம் நேர்ந்திடலாம்! ஒன்றும் அறியா உணர்வோடே ஒயா அலுவல் நடைமுறையில் என்றும் போல அலட்சியமாய் இருக்கும் போதே அதுநேரும் நன்றுடை நாளாய் இந்நாளே நம்முள் மலர்ந்தே சிரித்திடலாம்!
இறைவனைப் பற்றிச் சிறிதேனும் எண்ணம் கொள்ளா இந்நாளே உறங்கும் ஊமை வெளியினிலே ஒர்அடையாளமும் காட்டாத அறையும் முரசின் சிறுஒலியும் அண்டக் கா துகளே கேட்காத க
குறையுள இந்நாளே அந்நாளாய்க் குதித்தே வரினும் வந்திடலாம்!