பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ. சண்முகம்................................................ 10 கழுத்தை லறுத்தும் சுமையனைத்தும் கழற்றி எறிய வரும்நாளாய்ச் செழித்து வளரும் சுதந்திரத்தின் ஜீவ மூச்சைத் தரும் நாளாய் இழித்தப் பழித்தத் துன்பங்களை இறந்தக் கனவாய்ச் செய்கின்ற விழிநீர் துடைக்கும் திருநாளாய் விடிந்த இன்றே அமைந்திடலாம்!


மீண்டும்காண முடியாத விடாது பழகிய தோழன்போல் ஆண்டு ஆண்டாய் நம்முள்ளத்தை அலைத்து வந்த வேதனையைக் கூண்டுடன் கழற்றி நொறுக்கிடவே கூப்பிடும் உணர்வை நம்முள்ளே துாண்டிடும் நாளாய் இந்நாளே தோன்றும் இன்றே இருந்திடலாம்!