பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

.............எதைத் தேடுகிறாய்?

ஆழம் அளக்க இயலாத
ஆத்மக் கருணை விழியாலே சூழும் சுடரை உமிழ்கின்றத்
தூய ரட்சகன் பாதத்தைத்
தாழப் பணிந்தே புளகிக்கும் 'சாகாத நாளாய்' இந்நாளே
ஊழி ஊழி காணாத
ஓர்நாள் 'இன்'றாய் இருந்திடலாம்!

நாளை அந்திச் சூரியனும் நகைத்தே எள்ளி மறைந்திடலாம்! ஊமை இருட்டில் தடுமாறி உலராப் பாவச் சகதியிலே ஆள்மேல் ஆளாய் விழுகின்றோர் ஆயிரம் கோடியில் உயர்ந்திடலாம்!
வேளை மூன்றாய் இருந்திடலாம்! விழித்தெழு! குழந்தாய்! துதிபாடு!