பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ. கோ. சண்முகம்...........



     எதைத்தேடுகிறாய்? 

இறைவா! இறைவா கொஞ்சம்

                    பொறு! 
என்னுள் காயும் சினத்தைப் 
                     பார்! 

குறைத்தோ கூட்டியொ என்

  .               செயலைக் 
 குறிப்பில்,கணக்கில் 
                  எழுதாதே!


எதையும் சிறிதும் நம்பாமல்

   இருப்பவன் எவனும் 
               முரடன்தான்..! 

புதைத்துமறைத்தேஉணர்வுகளைப்

  'பூ'வென உதறிட 
                 நானறியேன்!


கசப்பும் கோபமும் இருந்தாலும்

  கடவுளே. உனைநான்
           மறுக்கவில்லை! 

பசப்பி மெழுகி வளைக்காமல்

 பட்டவர்த் தனமாய்ப் 
        .....  பேசுகிறேன்!




நற்றோர் சொத்தை அபகரித்த

   மண்புழுவை யேனும்
          கொன்றிட்டக் 'குற்றம் ஏதும் செய்தேனா? 
   கொடுங்கோல் தர்பார்
             புரிந்தேனா?