பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்......................................14

இரவுக் கால விடுதிக்குள்
இடறி விழுந்த பாவத்தினால் முறையாய் எனது ரத்தத்தை
முன்பே விரையாய்க் கொடுத்விட்டேன்

தேளாய்க் கொட்டும் வறுமையதே
திறவா என்மனைத் தாழ்ப்பாளாம் நாள்பின் னாளாய் நகர்ந்தாலும் நானொரு ஏழை எளியவனே

வர்ணக் கனவுகளின் சங்கமமாய்
வஸந்த ருதுவும் கவிபாடும்
சொர்ண ஜேததி மலர்களிடை
சொக்கும் ரோஜா நடம்பயிலும்

என்ன இருந்தும் எதுநடப்பினும்
எனக்கவை எல்லாம் பாழ்இருட்டே சின்ன அறையின் மூலையதில்
தேம்பிச் சோர்ந்தே கிடக்கின்றேன்

என்றன் ஆடை துளிகூட
ஏதோ மாயக் கல்லோடே
ஒன்றிப் பிணைந்து கிடப்பதுபோல்
உணர்ந்தே நானும் உளைகின்றேன்