பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோசண்முகம்....................... 1

பாலங்கள் வளரவில்லை!
பாறைச்சுவர் பெருக்கமில்லை!
காலமகள் கதறுலுக்கே
காதலிக்க யாருமில்லை!


சாதிமதச் சழக்குகளின்
சதிராட்டம் ஒயவில்லை!
நீதிமுறை முடமாச்சு!
நேர்மையதில் தள்ளாட்டம்!


துப்பாக்கித் தூங்கவில்லை!
தோட்டம்வயல் குறட்டையிலே!
உப்பதனின் விலையதிலும்
ஒருநூறு இறக்கைகள்!


இத்தனைக்கும் அருமருந்தை;
எளியதொரு மெய்மருந்தைச்
சத்தியத்துச் சரக்கெடுத்துத்
தருமத்தாய் செய்மருந்தை,


வையத்துப் பிணிஅனைத்தும்
வகையாகத் தீர்த்திட்டே
உய்விக்கும் புதுமருந்தை
உள்ளந்தான் தேடுகையில்-