பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வ.கோ.சண்முகம்.............................................2



பட்ட மரம்

நெட்டை மரம்! - தவ
நிட்டை மரம்!
வெறும் சொட்டை மரம்! - தலை
மொட்டை மரம்! - இனிக்
கட்டை மரம்!

வாழ்ந்த மரம்! - நிழல்
சூழ்ந்த மரம்!
தாழ்ந்த மரம்! - கிளை
வீழ்ந்த மரம்! - இன்றோ
வெற்று மரம்!

கெட்ட மரம்! உயிர்
விட்ட மரம்!
கனிகள் இட்ட மரம்! - யாரோ
நட்ட மரம்!
இன்றோ பட்ட மரம்!