பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

....

எதைத் தேடுகிறாய்.?

              யார்?
              ___________

                 பொன்திகழும் மாளிகைகள்
                சமைத்தவரும் யார்? - அங்கு
                போகப்பொருட்கள் பலவும்
                குவித்தவரும் யார்? - அவற்றில்
                மின்திகழும் கன்னியர்தம்
                மேனிதழுவி . காதல்
                மிஞ்சச்சு கம் விழைந்து
                கொஞ்சுபவர் யார்?
                மின்னவிர்நற் பொன்னணிகள்
                பண்ணியவர் யார்? - அவை
                மெருகுறவே உடலுருகிக்
                கருகியவர் யார்? - அந்தப்
                பன்னரிய நல்லபணிகள்
                தம்மையணிந்தே - நித்தம்
                பகட்டித்தி ரிந்துலவி
                வருபவரும் யார்?