இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ.சண்முகம்.....................................22
கண்கவரும் ஆடைபல
நெய்தவரும் யார்? -தையற்
கலைதிகழ்ந காசுவேலை
செய்தவரும் யார்?
விண்தவழும் மீனினம்போல் அவற்றையணிந்தே -நித்தம்
மினுக்கிக்கு லுக்கிமிகக்
களிப்பவரும் யார்?
களையெடுத்துப் பயிர்விளைத்து
உழைத்தவரும் யார்?-பயிர்
காத்து வளர்த் துடலம்
இளைத்தவரும் யார்?-வயல்
விளைவினையெ லாம்
பறித்துத் தின்று செழித்தே-உடல்
விம்மிப்பு படைத்துயர்ந்து
கொழுப்பவரும் யார்?