பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23 ........................................ எதைத் தேடுகிறாய்.?

புவனப்ப பரப்பனைத்தும்
பாதை சமைத்தே - உலகப்
போக்குவ ரத்தைஎளி
தாக்கியவர் யார்? - அதில்
நவநாக ரீகவாக னாதிகளிலே - எந்த
நாளும் பவனிவந்து
ஆளுபவர் யார்?


மேதினியெ லாம்வளர
உழைப்பவரும் யார்?- நாடு
மேன்மைபெறத் தம்முயிரை
அளிப்பவரும் யார்? - உடல்
வேதனைகள் ஏதுமின்றி
வீணிலுறங்கி - வாழ்வின்
வெல்லத் திணிப்பையெலாம்
மெல்லுபவர் யார்?

(1955)