இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ.சண்முகம்.......................................24
சந்தோஷம்
மதுவருந்தி வருகின்ற
மிகுபோதை களியாட்டம்
மனிதனிடம் நிற்பதுவோ
மூன்றுமணி நேரம் !
புதுக்கத்தி சவரத்தால்
புறாச்சிறகால் தடவல்போல்
பெறுகின்ற சந்தோஷம்
மறுநாளே போகும் !
பொருத்தமுளப் பெண்தேடி
பூமாலை தனைச்சூடிப்
போற்றுகின்ற மனைசுகமும்
ஓராண்டே ஆகும் !
கருத்துமிக்கத் தோட்டமிட்டே
காய்கனிகள் விளைவித்தால்
கணம்தோறும் குதூ கலங்கள்!
காலமெலாம் சந்தோஷம் !