பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்................................26

துயிலும் முன்

எத்தனை காடுகள்!
எவ்வளவு அழகு!
இணைந்தும்; நெருங்கியும்;
நிமிர்ந்தும் உள்ளன!
அத்தனையும் கடக்க
விரைகிறேன் நானே!
ஆயினும், ஆயினும்
இதய மூச்சால்
சத்திய மிட்டே
நான்கொடுத் திருக்கும்
தக்கவாம் வாக்குறு
திகளை எல்லாம்
மெத்தவும் மதித்தே
காத்திட வேண்டும்!
மீண்டும் துயிலுமுன்
நீண்டதென பயணம்!

1963

(ஜவஹர்லால் நேரு, தம் கையால் எழுதித் தமது மேசை மீது வைத்திருந்த 'ராபர்ட் ஃப்ராஸ்ட்' கவிதையின் தமிழ் வடிவம்.)