இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ.சண்முகம்.................................28
தனக்குறும் துன்பம் ஏற்றுத்
தமர்க்குறும் துயர்கள் நீக்கும் மனக்குணம் கொண்ட சான்றோர்
மாண்பினைப் போல நீயும்
மணல்கீறித் தாள்கள் நீட்டி;
மலினநீர் உண்டு வுண்டே
இனிக்கின்ற அமுதைத் தனைய
இளநீ ராய்த் தருகின்றாயே!
காசுக்கே ஆசை காட்டிக்
கவர்ச்சியாம் அங்கம் காட்டும்
வேசியைப் போலக்; கசப்பு
வேம்பினைப் போல; நாய்கள்;
யாசிப்போர் போல வன்றி
எப்போதும் ஒருமைப் பாட்டை;
நேசத்தைக் கூடும் உறவை
நிசமாக்கும் உன்றன் தோப்பே!
ஓலையால் கூரை யாகி;
ஒப்பனைக் கலையாய் ஆகி; மாலையாய், கூந்த லாகி
வனப்புறு பொம்மை யாவாய்!
மூலையில் ஒண்டிக் கிடந்து
முழுவீட்டின் தூசு போக்கும்
மேலதாம் பொருளில் நீதான்
மெய்ஞ்ஞானி யாகி நிற்பாய்!