இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ.சண்முகம்........................................30
இருக்கின்ற செல்வம் யாவும்
ஈந்திட்டும்; வறண்ட போது
சிரிக்கின்ற இதழ்க ளோடு
சேவைக்கே ஆவி தந்து
மரிக்கின்ற பெரியோர் போல
மண்மேல்நீ வீழ்ந்த பின்பும்
எரிக்கின்ற விறகாய் ஆவாய்!
யாருண்டு உனைப்போல் வள்ளல் ?
தேங்காயின் அமைப்பை நோக்கில்
'சிரட்டையே அறிவு!'; அதனுள்
பாங்காக இருக்கும் பருப்பே
'பண்பாடு'; இவற்றை என்றும்
நீங்காத 'அன்பே' இளநீர்!
நிறைவாழ்வின் ரகசி யத்தைத்
தாங்கியே பேசும் தென்னைத்
தருவே! நீஞான ஆசான்!
பிள்ளைகளே ஒருவ ருக்குப்
பெருஞ்செல்வம் ஆன போதும்
சள்ளைகளும் சிலநே ரத்தில்
தருகின்றார்! நீதான் என்றும்
பிழைகளே செய்வ தில்லை!
கொள்வதோ கொஞ்சம்! வாரிக்
கொடுப்பதில் வள்ளல் நீதான்!