இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31 ...................................எதைத் தேடுகிறாய்.?
ஒருகாணி மனையி லேனும்
உன்இனக் குடும்பம் ஒன்றை
அருமையாய் வளர்த்து விட்டால்
ஆயிரம் வளங்க ளோடு
சிறுமையே ஏது மின்றிச்
செம்மாந்தே வாழும் கெட்டிப்
பெருமையைத் தருவாய்! நீயே
பிள்ளைகளில் மூத்த பிள்ளை!