இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33 ........................... எதைத் தேடுகிறாய்..?
கேள்வியிலா விடையாகி.
பசியெரிக்கக் குமுறுகையில்
பாலமுதச் சுவைக்கனிகள்
ருசியறிந்தே இதமாக
ஊட்டுகின்ற திருக்கரத்தில்
வசிக்கின்ற மெய்க்கருணை
வாஞ்சையதை வியப்பேனோ?
இருள்வழியில் தடுமாறி
இடறிவிழும் தருணமெலாம்
அருள்ஒளியை முன்வீசி;
அறவழியில் எனைச்செலுத்தி
மருள்நீக்கும் மெய்க்கருணை
வல்லமையை வியப்பேனோ?
உள்ளுறும் மனத்தணலாய்
ஓங்கியெழும் சத்தியத்தின்
விள்ளரிய ஆற்றலுறு
வித்தகனாய் எனையாக்கித்
துள்ளவைக்கும் மெய்க்கருணை
சூட்சமத்தை வியப்பேனோ?