இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ.சண்முகம்........................................... 34
கேட்கின்ற கணத்தேயே
கிரீடமணிப் பொற்குவையை
வேட்கின்ற வெறுங்கையில்
விட்டெறிந்தே நகைத்தென்னை
ஆட்படுத்தும் மெய்க்கருணை
அதிசயத்தை வியப்பேனோ?
கேள்வியிலா விடையாகிக்
கிட்டியதில் அரிதாகி
முள்வினையைப் பின்தள்ளும்
மூலமுதற் பொறியாகும்
நாள்வாழ்வாம் வினாடிகளின்
நாயகியே அவளன்றோ?
-1962
(கவிஞர் மனமுருகி வழிபட்ட வைத்தீஸ்வரன் கோவில் அருள்நிறை 'தையல்நாயகி' மேல் பாடிய கவிதை)