பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35 .................................எதைத் தேடுகிறாய்..?

இன்றும் வா

இழிந்து சிறுத்த மாந்தரை,
ஈரமிலாக்கொடும் வேந்தரை - அன்று வழிந்தொழுகும் செங்குருதிச் சிலுவையால் வாழ்த்திய நல் இரட்சகனே! இன்றும் வா!


யுத்தப் பேய்ஊ ளையில்,
உலகம் அதிர்வே ளையில் - உன்
சத்தியத்து வேதஒளிப் புத்த முதைத் தரணிக்கீய திருமகனே! இன்றும் வா!


விண்பிடிக்கும் பேராசை
வெறிகொடுக்கும் போராலே - இந்த மண்நடுங்கும் அவலமெலாம் கண்ணொடுங்க மாக்கருணைச் சுடரொளியே! இன்றும், வா!


இதயம் மரத்த அறிவினால்
இருளின் மகுடம் சிரிக்குதே! - புது
உதயக்கதிர் போலெழுந்து, அருட்கரத்தால் உலகணைத்த அன்புருவே! இன்றும் வா!