பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ.சண்முகம்.................................36


தண்மதியில் நாமும்...!

'பங்களாதேஷ்' இதுவோ இன்று,
பால்கிண்டி வாயில் உள்ளச்
சிங்கத்தின் குட்டி! அன்பின்
சீதனங்கள் பெற்றுக் கொள்ளும்
தங்கத்துப் பிஞ்சு! ஞாலம்
தாலாட்டும் செல்லப் பிள்ளை!
வங்கத்தின் உதிரம் பெற்ற
மாசிலாத் தியாகச் சிற்பம்!


ஏழையாய் ஆக்கப் பட்டோர்
இரத்தமாய்ப் பொழிந்த கண்ணீர்-
கோழையாய் நரியாய் ஆட்சிக்
குரங்கதாய் மனதை; தோட்டாப்
பேழையாய் ஆக்கிக் கொண்டப்
பேடிகள், பேய்கள் எல்லாம்
கோழைகளாய்ப் போக வைத்த
முதிர்வீரக் கொத்தே அதுவாம்!