பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37 ..........................எதைத் தேடுகிறாய்..?


சம்பளம் கொடுத்தால் கூடச்
சைத்தானே செய்யக் கூசும்
வம்பெலாம்; வதையெலாம் செய்தே
வனிதையர் கற்பைத் தின்றக்
கும்பலாம் நரக நாய்கள்
குரல்வளையை முறித்தெ றிந்தே
உம்பர்கள் பாட்டை மீட்டும்
உயிர்வீணை; ராகத் தென்றல்!


தீப்புயல்தான் சினந்து வீசத்
தீய்ந்துதிரும் மலர்கள் போலக்
காப்பிடம் இமய மாதா
கரங்களின் நிழல்தா னென்றே
கூப்பாட்டில் உலகே தேம்பக்
கோடியாய் வந்தோர்க் கன்றுச்
சாப்பாடாய்; உடையாய் பரிவைச்
சமைத்தளித்தோம்!
காத்தோம்!உயர்ந்தோம்!!!