இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ.சண்முகம்............................... 38
அகண்டமா நெடும்பு
வியையே
அறுத்த றுத்துத் துண்டு போடும்
'பகல்கனவு வாதிக் கெல்லாம்
பங்களாதேஷ அ-ஆ’ ஆகும்!
நெகிழ்கின்ற மனித நேய
நிரவலே, பரிமா றல்தான்!
மகிழ்கின்ற தெய்வீ கத்தின்
மதமாகும்! மார்க்க மாகும்!!
யுகங்களை அடுக்கி வைக்கும்
காலமே செவி கொடுப்பாய்!
அகதிகளைச் சுமந்த தேபோல்
அப்பங்களா தேஷின் உறவில் புகழினைச் சுமப்போம்! நட்பைப் புடமிட்டுப் பார்த்து விட்டத்
தகுதியாம் மெருகால் அந்தத்
தண்மதியில் நாமும் சுடர்வோம்!
-1972