பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ. சண்முகம்........................................ 40

ஈஸ்வரன், அல்லா, ஏசு என்னும் அனைவரும் உனக்கு ஏசு கடவுளே!
சாஸ்வத ஆன்ம நேயம் ஒன்றே
சர்வ காலப் பூஜையாய்க் கொண்டாய்!

அள்ளி அணைக்கவே அறிவாய் நீதான்! அதட்டி அடக்கவே அறியாய் நீயே!
பள்ளிகள் யாவும் ஓதும் பாடம்
பஞ்ச சீலத் தாரகம் ஒன்றே!

கங்கை என்றொரு ஞானப் புனலைக்;
காவிரி என்றொரு கருணைப் பெருக்கை
மங்கலச் செழுமையின் சங்கீதங்களாய்
மலர்ச்சியாய்க் கவிமையாய்க் கொண்டனை தாயே!

தருமம் உன்றன் தலைமகுட மாகும்!
சத்தியம் உனது சிம்மா சனமாம்! கரும வீரமே கையமர் செங்கோல்!
காக்கும் அறமே கொற்றக் குடையாம்!

சோலை மலர்கள், வயலின் தோகைகள்
சுதந்திர சுபீட்ச சாகஸம் காட்டிட
ஆலையை, அணைகளை ஆலயம் ஆக்கினை!
அற்புத உழைப்பின் விழிப்பே ஆனாய்!