பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்...........42 மதுவில்,மங்கையில்,மாத்திரை களுக்குள் மாயா சுவர்க்கம் இருப்பதாய் உளைந்தேன்! எதுவும் பொய்யே என்பதை உன்றன் இனிய சன்னதி புகுந்ததும் உணர்ந்தேன்!

எண்ணில் என்னைக் காட்டினை அம்மா! என்னையும் மகவாய் உன்னில் ஏற்றனை! பொன்னை; பொழுதை; புத்தியை இழந்தே பொட்டலாய் வந்தேன்! பூஞ்சோலை ஆக்கினை

பாழ்த்த நெஞ்சாம்; காழ்த்த நெஞ்சாம் பாலையில் நீதான் பால்தேன் சுனையே! வாழ்த்துகிறேன் வணங்குகிறேனர்! வருகிறேன் தாயே! வணக்கம்! வணக்கம்! கோடி வணக்கம்!!

வந்த ஹிப்பி'நான் வழிப்போக் கன்தான்! மாதா உன்னால் மறுபிறப் பெடுத்தேன்! 'இந்தியப் புழுதியே' ஆன்மநோ யதற்கு ஏற்ற மருந்தாய் எடுத்துச் செல்கிறேன்!

                       (1972)