இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43..............................எதைத் தேடுகிறாய்.?
உன்னைப் போலவே..!
உன்னைப் போலவே அவள் இருப்பாள்!
ஒளியால் கிறுக்கிய
ஓவியம் போலவும் அவள் இருப்பாள்!
(உன்னைப் போலவே-!)
மின்னைச் சொடுக்க இடைஇருக்கும்!-அன்ன
மிதப்பாய்க் கர்வ நடைஇருக்கும்!தென்னம் பாளை விரிப்பாகப்-பருவம்
தேடும் காதல் சிரிப்பிருக்கும்!
(உன்னைப் போலவே-!)
கொள்ளை அழகுப் பதுமை
அவள்!-இளமை
குலுங்கும் பச்சைப் புதுமை அவள்!
பிள்ளை மனசுடன் கிளுகிளுப்பாள்-அவள்
பின்னே புயலும் சிலுசிலுக்கும்!
(உன்னைப் போலவே-!)
யாழாய்த் துயின்றிட அவள்போனாள்!-துன்பம் இமைகள் பயினர்றிட அவள் போனாள்!
பாழாய் இருட்டாய்ப் போனாலும்-உன்றன்
பாவனை உயிர்ப்பாய் ஆனாளே...!
(உன்னைப் போலவே-!)
-1948