பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்................................44

நூற்றுக்கு நூறு

பீஜிங்கின் மோகினியால் ஜாடை காட்ட
பிண்டிநவாப் காஷ்மீரில் வாலை ஆட்டி
வேகமுற மோகமுறப் பார தத்தை விழுங்குதற்குக் கனாக்காணும் இந்த வேளை
தாகமதாய்ப்,பசியுணர்வாய்; நாள மெல்லாம்
தகித்து வரும் நெருப்பலையாய் வீரம் ஒன்றே
ஏகமனப் பரித்தியாக வடிவில் மாறி
இதயமெலாம் சதிராடிப் பொங்க வேண்டும்!

தேசத்தின் தேவை எது? சரித்தி ரத்தின்
திருப்பம்எது? எழுச்சிஎது? என்ப தறிந்தே
மாசற்ற தனிவீரம் விம்மும் கொத்தாய்-
மாறாத பேரியல்பின்-பண்பின் சொத்தாய்
நேசத்தை, அன்புறவை, மனிதப் பாங்கை
நீள்புவியைக் கனிவிக்கும் புனிதப் பணியை
ஓசையிடும் இலக்கியமே;கலையே - கூத்த ஓவியமே இந்நேரம் பிறக்க வேண்டும்!