பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்.................................... 46


"ஆற்றலொடு அளவினிலும் விரிந்த தான
அரியதொரு செல்வாக்கால் சினிமா இன்று
போற்றுகின்ற கலையாச்சு! அக்க லைதான்
புவிமக்கள் வாழ்வியலை; வடிவை எல்லாம்
மாற்றுகின்ற வலிவதையும் ஏற்கலாச்சு!
மாறாக அக்கலைதான் மாறும் போக்கை,
நூற்றுக்கும் நூறாக தீங்கே செய்யும்
நுவல்காமக்கொலைப் படத்தை ஒழிக்கவேண்டும்”


இவ்வாறு பத்தாண்டு முன்ன மேயே
இதயபிரான் பாரதத்தின் இமய நேரு
செவ்வியதோர் சினிமாவின் கருத்தரங்கில்
தெளிவாகச் செப்பியபின் மேலும் சொன்னான்:
"ஒவ்வாத கொலைகாமக் கதைப்ப டத்தை
ஒருதுளியும் தயங்காது; பரிவே இன்றி
அவ்வந்த அரசாங்கம் ஒழிக்க வேண்டும்!”
அன்றல்ல; இன்றைக்கும் இதுவே தேவை!

- 1965