பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47.................................எதைத் தேடுகிறாய்..?


பாதி ஆப்பிள்!

கவிதை என்பது...?
கவிதை என்பது...?
நினைவின் உயரம்!
கனவின் உத்தி!


அறிவின் பொய்கள்!
ஆத்மாவின் நிஜங்கள்!
அழுகையின் சிரிப்பு!
ஆனந்த அழுகை!


தெளிவுகளின் மயக்கம்!
விழிப்புகளின் தூக்கம்
பாறைச் சதைகளைச்
செதுக்கிக் கடைந்து


பூக்க ளாக்கும்
பூடக வித்தை!
மேக இருட்டை
வெட்டிப் பிளக்கும்