இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ.சண்முகம்.......... 48
மின்னல் கைகளின்
மாய வாட்கள்!
வெள்ளி முளைத்தும்
விடியாத இரவு!
மலட்டுச் சுள்ளி
மிலாறு களுக்கும்
கர்ப்பம் கொடுக்கும்
காமச் சிறுத்தை!
அனாதை யான
கற்பனை கட்டும்
கடவுளின் தொட்டில்!
காகித ரட்சை!
ஆயிரம் சாய
அலைகள் அடிக்கும்
காயாத சமுத்ரம்!
ஆழப் பள்ளம்!
தொடுவானக் கொடிகளில்
பருவம் அடைந்து
கணிகளைக் கூப்பிடும்
கசங்காத பூக்கள்!