பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49............................................. எதைத் தேடுகிறாய்..?

புயலையும் நெருப்பையும்
புசித்துக் களிக்கும்
விசித்திர மான
வீட்டின் விருந்து!

'நேற்'றை வாங்கி
'இன்'றிடம் விற்று
அடையத் துடிக்கும்
'நாளை'ய லாபம்!

கடித்துக் கொண்டே
இருக்கும் போது
திருட்டுப் போய்விடும்
பாதி ஆப்பிள்!

-1962