பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்...................50


அன்னை !

அன்னை என்பவள் நயன்றோ?
ஆருயிர் அனைத்தின் தாயன்றோ?
மின்னும் தியாக வாழ்வுககே
மெய்யாய் நீதான் முன்னோடி


ஒவ்வொரு உதயமும் வினாடிகளும்
உன்றன் பணியின் திருவிழாக்கள்
திவ்விய பவித்திர அர்ப்பணமே
தேவியுன சில உயிர்மூச்சு


கொள்வதனைத்துமே கொடுக்கின்றாய்
கொடுப்பதில் களித சிரிக்கின்றாய்
அள்ளிய தனைத்தும் விடுக்கின்றாய்
ஆத்ம பூரிப்பாய் நுரைக்கின்றாய்


நில முகிலாம் வுள்ளவன்
நினைக்கே வழங்கும் பிரசாதம்
காலம் முழுதும் உயிர்காக்கும்
காவிரி நதியின் உருவாச்சு