இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51 ........................எதைத் தேடுகிறாய்...?
சத்தியம், நீதி கரைகளுக்குள்
தர்மமே உன்னில் வடிவெடுத்தே
நித்தமும் பொங்கிப் புள்வதுபோல்
நின்னில் ஒருதவம் நடக்குதம்மா
துளியே கிடைப்பினும் ஏற்கின்றாய் தொடர்ந்து காயவும் தயங்கவில்லை 'எளிமை' 'அடக்கம்' 'தொண்டு'களின் இலக்கியக் குரலே உன்முழக்கம்
வெள்ளமாய் சீறிப் பாய்ந்தாலும் விரிகடல் கைகளில் அடங்குகிறாய்
உள்ளம் நெடுக அருட்கொடையே
ஒரேயொரு எண்மாய் நீகொண்டாய்
தரிசுப் பாழை முத்தமிட்டே
தாவர சொர்க்கம் படைக்கின்றாய்
பரிசோ கூலியோ கேட்கவில்லை
பசியோ துயரோ காட்டவில்லை