பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

101

தை’ இதழில் நான் எழுதிய ‘தேவதாசி’ பற்றிய கதையை வெகுவாகப் பாராட்டினார். அந்த நடை தனக்கு மிகவும் பிடித்தது என்றார். அந்த கதையில், எனக்குப் பிடிக்காமல் போனது இந்த நடைதான். அத்தகைய நடையை நான் இப்போது விட்டுவிட்டேன். ஆனால் நண்பர் தமிழவன், இந்த நடை தம்மை மிகவும் கவர்ந்ததாகவும் கதையும் சிறப்பாக இருந்ததாகவும், என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் கட்டுரை என்று வந்த போது தமிழ் சிறுகதைகளைக் கொண்ட கன்னடத் தொகுப்பில், நகுலனின் கதை விட்டுப் போனதைப் பற்றி குறைப்பட்டுக் கொண்டார். ஆனால் என் கதை விடுபட்டது, அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. குறைந்தபட்சம் நான் கன்னட மக்களைப் பற்றி கதை எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவை தொகுப்பில் இடம்பெறும் அளவுக்கு முழுமையாக இல்லை என்றாவது, அவர் சொல்லியிருக்கலாம். அந்த மக்களைப் பற்றி முழுமையாக எழுதியவனைப் பற்றி ஒருவரி கூட அவர், எழுதாதது எனக்கு வேதனையை அளித்தது. நண்பர்கள் என்றாலும், நேரிடையாக பாராட்டினாலும், கட்டுரை என்று வரும் போது, தங்களுக்கென்று இருக்கக்கூடிய முகமூடிகளை போட்டுக் கொள்வது, இயல்பாகிவிட்டது என்பதற்கு, அவரது விமர்சனக் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. இதனாலேயே பெங்களுரில் உள்ள எனது நண்பர்கள் சிலர் எனது கதைகளை - அதாவது கன்னட மக்களைப் பற்றி எழுதிய கதைகளை, கன்னட மொழியில் கொண்டு வர வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்குத்தான் நேரம் இல்லை. அதோடு கன்னடத்தில் எனது கதைகள் வெளிவராததால் கன்னட