இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102
சு. சமுத்திரம் ☐
மக்களின் குடியோ அல்லது எனது குடியோ கெட்டுப் போகப்போவதில்லை என்ற ஒரு எண்ணமும் காரணம். என்றாலும் திறனாய்வு என்ற பெயரில், முதுகுசொரியும் படலம் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தை சனியன் மாதிரி பிடித்திருக்கிறது. இதையும் மீறித்தான் ஒரு ஆத்மார்த்த எழுத்தாளன் மேலே எழும்ப வேண்டியிருக்கிறது.