பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


12
அதிகப் பிரசங்கித்தனம்...


கேள்வித்தீ

கல்பனா மாத இதழுக்காக நான் எழுதிய குறுநாவல், ‘ஊருக்குள் ஒரு புரட்சியாக’ ‘தேவி’யில் வந்துவிட்டது. என்றாலும், இப்படித் தாங்கள் கேட்டு எழுதப்பட்ட நாவல் வெளிவரமுடியாமல் போனதற்காக அந்த இதழை பிரசுரித்த நியு செஞ்சுவரி பிரசுரத்தின் நிர்வாகிகளான தோழர்கள் ராதாகிருஷ்ணன், குசேன் ஆகியோர் மிகவும் வருத்தப்பட்டார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, என்னை என் அலுவலகத்தில் சந்தித்தார்கள். எப்படியோ, தவறு நடந்துவிட்டது என்றும், நான் உடனடியாக ஒரு குறுநாவலை “கல்பனா”விற்கு எழுதித்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் நினைத்தால் என்னை ஒரம் கட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் மார்க்சிய மனிதநேயத் தொண்டர்கள்.