பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

சு. சமுத்திரம் ☐

மனம் விட்டுப் பேசினோம். பின்னர் கல்பனாவில் எல்லோரும் பேசுகிற மாதிரி ஒரு நாவல் எழுதவேண்டும் என்று சிந்தித்தேன்.

பொதுவாக, நான் கதைகளோ அல்லது நாவல்களோ எழுதும்போது, பல்வேறு சம்பவங்களை சுமார் ஒரு மணிநேரம் வரை நினைத்துப் பார்பேன். இந்த முயற்சியில் பல கதைக்கருக்கள் மனதுக்குள் உருவாகும். இவற்றில் எதை எழுதலாம் என்று சமூக நோக்கத்தோடு கணக்குப் போடுவேன். இப்படி நான் சிந்தித்தபோது, கிராமப் புறங்களில் நடைபெறும் தனியார் பள்ளிக்கூட சங்கதிகள் நினைவுக்கு வந்தன. இப்போதாவது இந்த பள்ளி நிர்வாகிகளின் ஆட்டமும் பாட்டமும் ஓரளவு அடங்கியிருக்கிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு இவர்களே எஜமானவர்கள்; ஆசிரியர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க மாட்டார்கள். அத்தைமகன், மாமாபிள்ளை, பெரியம்மா பேரன், சின்னம்மா புருஷன் ஆகியவர்கள் தான் பள்ளியில் ஆசிரியர்களாக இருப்பார்கள். நியாயம் கேட்கும் ஆசிரியர்கள் எல்லா விதத்திலும் அடிபட்டுப் போவார்கள். எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியைக்கு அப்போதைய சம்பளம் 400 ருபாய். அந்த அம்மாவுக்கு மானேஜர் 100 ரூபாய் கொடுத்தார். அந்த ஆசிரியை ‘400 ரூபாயாச்சே’ என்று கேட்டார். உடனே, அந்த மானேஜர் ‘நீ வயலுக்கு களைவெட்டப் போனால் முப்பது ரூபாய் தானே சம்பளம். அதைவிட நான் மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் அழுகிறேனே’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம். போதாக்குறைக்கு, அந்த ஆசிரியை