பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

149

தனது சர்டிபிகேட்டை வேற இந்த நிர்வாகியிடம் கொடுத்திருந்தார். ஒரு பள்ளிக் கூட மானேஜர் இறந்ததும் அவரது இரண்டு மகன்களும் மானேஜர் வேலை யாருக்கு என்று போட்டா போட்டியில் இறங்கினார்கள். இறுதியில் உறவினர்கள் முன்னிலையில் மானேஜ்மென்ட் உரிமை ஏலம் போடப்பட்டது. ஏலத்தில் அதிகத் தொகை கேட்ட தம்பிக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கப்பட்டது. இந்த ஏலத்தை முதன்மையாக வைத்து ஆசிரியர் போராட்டத்தைச் சித்தரிக்கும் “கேள்வித்தீ” என்ற குறுநாவலை எழுதி கல்பனாவுக்கு கொடுத்தேன். ஆசிரியர்கள் சமூகத்தில் இன்னும் இந்த நாவல் பேசப்படுகிறது.

‘கல்பனா’ மாத இதழ் இன்றைய அசிங்கமான மாத நாவல்களைப் போல் அல்லாமல், தரமான நாவல்களைக் கொடுப்பதற்காக உருவானது. ஒரு நல்ல நோக்கம் கூட எப்படி தோற்கடிக்கப்படும் என்பதற்கு இந்த இதழின் ஆசிரியத்தனமும் அதற்கு உடன்பட்டுப் போன நிர்வாக முறைமையும் காரணங்கள். எடுத்த எடுப்பிலேயே அசோகமித்திரன், சா.கந்தசாமி என்று தெரியாத பாணியில் எழுதப்பட்ட நாவல்களை வெளிப்படுத்தினார்கள். பின்னர் வாசகர் வட்டம் என்ற பெயரில் பல்வேறு நகரங்களில் கூட்டங்கள் போட்டு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் அவரது விசிறிகளுக்கும் மேடை கொடுத்தார்கள். இதற்காக பேச்சாளர்கள் போக்குவரத்து, கூட்டச் செலவு எல்லாம் கல்பனா இதழின் தலையில் கட்டப்பட்டது. அது நஷ்டப்பட்ட போது, வாசகர்கள் மேல் பழிபோடப்பட்டது. இந்த இதழை மட்டும் ஒழுங்காக