பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

151

காருக்கு என்று ஒரு மைதானத்தில் பாதி இடத்தை அடைத்து வைத்திருந்தார்கள். அவரைப் பார்க்கப் போகும் எவரும், காரை அந்த சின்னச் சுவர் கேட்டிற்கு அப்பால் நிறுத்தி விட்டுத்தான் போகவேண்டும். இத்தகைய சுல்தான் கோடுகள் இன்னும் நமது நிர்வாக வளாகங்களில் வரையப்பட்டுத்தான் வருகின்றன. இந்த நிகழ்ச்சியும் மனதுக்குள் வந்தது. இதை வைத்து “இவர்களின் உலகம்” என்ற சிறுகதையை எழுதினேன். தோழர் மாலன் ஒரு வரியைக்கூட சிதைக்காமல் அப்படியே பிரசுரித்தார். இந்தக் கதைக்கு நல்ல பேர்.

மூன்று வரி விமர்சனம்

இந்தக் கதை பிரசுரமானதை விட என்னைப்பற்றி நண்பர் மாலனே மூன்று வரிகளில் எழுதியிருந்த விமர்சனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ‘பகிரங்கமான கிண்டலுக்கும் அதற்குள் மறைமுகமான எதிர்ப்புக் குரலுக்கும் பேர் போனவை சமுத்திரம் சிறுகதைகள்’ என்று எழுதியிருந்தார். இதுதான் என்னைப் பற்றி நானும் கொண்டிருக்கும் கணிப்பு. இந்தக் கதையை பல வாசக நண்பர்கள் படித்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் இதனை எப்படி உருவாக்கினேன் என்பதை இதோ பகிர்ந்து கொள்கிறேன்.

கொள்ள வேண்டியவை - தள்ள வேண்டியவை

மாவட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக வருவாய்த் துறை நண்பர்களுக்கு கலெக்டரே உலகம். ஒரு வேடிக்கையான கதை கூடச் சொல்லுவார்கள். ஒரு டாவாலிப் பியூன் ஆட்சித் தலைவர் வீட்டுக் கிணற்றில் ஒரு தவலையைக் கட்டி தண்ணீர் மொண்டு கொண்டு