பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

157

தைப் பற்றி நான்கு சிறுகதைகளை எழுதினேன். அந்த அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பயிற்சியோ-பயிற்சி

மத்திய-மாநில அரசுகளில் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கென்று பல உருப்படாத அமைப்புக்கள் உண்டு. அதில் ஒன்று புதுதில்லியில் உள்ள ஒரு அமைப்பு. இங்கே இருப்பவர்கள் வாழ்வதற்காக எங்கெல்லாமோ பணியாற்றுபவர்கள், பயிற்சிக்காக ‘சாகடிக்கப்படுவார்கள்’. யாருக்குமே தெரியாது. ஏதோ ஒரு கிளார்க் போடுகிற ‘நோட்டில்’ செக்ரட்டரி கையெழுத்துப் போட்டு அனுப்பி விடுவார் - லாட்டரி குலுக்கல் மாதிரி. ஆனால் லாட்டரியோ அதிர்ஷ்ட சீட்டுக்கள். பயிற்சியோ துரதிருஷ்ட சீட்டுக்கள். தற்காலிகமாக சிலரை கழித்துக்கட்டவும், சிலர் புதுதில்லி வேலைகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், இத்தகைய பயிற்சி உதவுவதுண்டு. இந்த வகையில் நானும், பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன். ஏற்கனவே இந்த அமைப்பில் மூன்று தடவை “பயிற்சி” பெற்றவன் நான். நான்காவது தடவையும் என்னை அனுப்பினார்கள். வெறுப்போடு சென்ற நான் பயிற்சி அதிகாரிகளின் பிரதிநிதியாக செயல்பட்டேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பயிற்சிக்கு வந்த அனைவருமே பயிற்சியாளர்களை பயிற்சிவிக்கும் தகுதியும் வயதும் பெற்றவர்கள். அந்த ‘ஏட்டுச்சுரைக்காய்கள்’ பேசும் போது தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை. என்றாலும், அரசு அலுவலகங்களில், துருப்பிடித்துக்