பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சு. சமுத்திரம் ☐

கிடந்த சொந்த ‘பைல்களைத்’ துடைப்பதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு பயிற்சி என்ற பெயரில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் பயிற்சி என்பது எப்படி நாட்டிற்கோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கோ உதவாதது என்பதுமல்லாமல், விவஸ்தை கெட்டது என்பதை ஒரு ‘சட்டயர்’ சிறுகதையாய் எழுதியிருக்கிறேன். பயிற்சிக்கு சென்ற ஒரு தமிழக அதிகாரி, பயிற்சி நிறுவன இயக்குனரைப் பார்த்து “28ம் தேதியே பயிற்சி முடிய வேண்டும்” என்கிறார். நிறுவனத்தலைவரோ, 31ம் தேதிதான் முடியும் என்கிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம், கடைசியில் நிறுவன இயக்குனர் 28ம் தேதி எதற்காக பயிற்சி முடிய வேண்டும் என்று கேட்க, அந்த அதிகாரி, 28ம் தேதி முடிந்தால்தான், நான் உடனே தில்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு, 31ம் தேதி பொறுப்புக்களை ஒப்படைக்க முடியும். ஏனென்றால் 31ம் தேதி நான் ரிட்டயர்டு ஆகிறேன் என்கிறார். இப்படி உள்நாட்டுப் பயிற்சிகள் அல்ல, வெளிநாட்டுப் பயிற்சிகளும இந்த லட்சணத்தில்தான் நடைபெறுகின்றன.

சூடாமணியின் கண்ணீர்

புதுதில்லியில் அந்த அமைப்பிடம் உள்ள ஹாஸ்டலில் நாங்கள் தங்கினோம். பம்பாய்த் தொலைக்காட்சி ஆசிரியை, அஸாம் செய்தி விளம்பரத்துறை அதிகாரி, பெங்களூர் பத்திரிகை தகவல் அதிகாரி, முதலிய பல்வேறு மாநில அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாதம் இருந்தோம். இது புதிய அனுபவம்; இதே விடுதியில் பத்திரிகை இயல் பற்றி பட்டம் வாங்குவதற்காக பல மாணவ, மாணவிகள் இருந்தனர்; தமிழக