பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

159

மாணவிகளும் நான்கைந்துபேர் இருந்தனர். இந்த இளைய தலைமுறையினரிடம் ஒரு அளவு கூட சமூகப்பிரக்ஞை என்பது இல்லை. பல “தோழர்களோடு” ஒருத்தி செல்வதும், ஒருத்தியுடன் பல “தோழர்கள்” செல்வதும், இரவெலாம் கும்மாளம் அடிப்பதும், தோழர், தோழிகள் ஒருவரை விட்டு ஒருவர் காதல்-காட்சிகள் மாறுவதும், சகஜம். (ஒரு வேளை பாதிக்கிழடுகளான எங்களுக்கு, பொறாமையாகக் கூட இருந்திருக்கலாம்!) ஆனாலும் இந்த இளம் பட்டாளம் நடந்து கொண்ட முறை என்னவோ போலிருந்தது. குறிப்பாக அச்சம், மடம், நாணம், பயிற்பு என்ற அரும்பெரும் குணங்களைக் கொண்டதாக கருதப்படும் நமது தமிழ் தாய்க்குலம், காஞ்சமாடு கம்பம் புல்லுக்குள் போன கதையாய் நடந்து கொண்ட விதம், பிரச்னையை இன்னும் ஆழமாய்ச் சிந்திக்கத் தூண்டியது. அதேசமயம் அங்கேயிருந்த ஒரு உத்திரபிரதேச சமையல்காரப் பெண், அசல் தமிழ்பெண் போல் நடந்து கொண்டாள். எங்களுக்கும், மாணவர்களுக்கும் சப்பாத்திகள் வழங்கும்போது, அந்த இளம் பெண் ஒரு மூதாட்டி போல தாய்மைப் பரிவோடு நடந்து கொண்ட போக்கும், பாட்டாளி கலாச்சாரம் இன்னும் கெட்டுப் போகவில்லை என்ற எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்தது. நெருப்புக்கு நெருப்பாகவும், நீருக்கு நீராகவும், அந்தப் பெண் பல்வேறு தரப்பினரிடமும் பட்டும் படாமலும் அதே சமயம் தாய்மைப் பாசத்துடனும் நடந்து கொண்டாள். இப்படிப்பட்ட இரண்டும் கெட்டான் பெண்மையையும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த சமையல்காரப் பெண்ணின் பெண்மையையும், இவற்றின்