பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

சு. சமுத்திரம் ☐

வில்லை. அதே சமயத்தில் என்னை மாதிரியான நடுத்தர வயதுக்காரர்கள், ‘சின்னஞ்சிறுசுகள்’ காதலிப்பதை அலட்சியப்படுத்துவதுபோல் லட்சியப்படுத்தியதும், லேசாக கண்களைச் சிமிட்டியபடியே ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே ஒன்றையோ, பலதையோ தேடிப்பார்த்ததையும் நினைத்தபோது, இந்த இளைய தலைமுறையினரும், பிற்காலத்தில் இப்படித்தானே நினைக்கப் போகிறார்கள் என்ற சிந்தனை ஏற்பட்டு, வாழ்க்கை சுவையானதாகவும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நினைவுகளின் சாம்பலின்றி வேறில்லை என்பது போலவும் தோன்றியது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஒரு கலை நயத்தைக் கண்டேன். ஒவ்வொருவர் பேச்சிலும், மனித உணர்வு சர்வதேசத் தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்தேன். மொழி, மதம், என்பவை வெறும் போர்வைகளே என்பதை முன்பே கண்டிருந்தாலும், இந்த வயதில் கண்டது ஒரு அருமையான அனுபவம். இப்போது நினைக்கும்போதும், மனது அடித்துக் கொள்ளுகிறது. அந்த ஒருமாத கால பொற்காலத்தில் இருந்து, மீண்டும் தமிழக கற்காலத்தில் விழுந்து கிடக்கிறேனே. விழுவதும் எழுவதற்கே - அதாவது எழுதுவதற்கே!

‘நண்பர் வட்டத்தில்’ எனக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததைப் பாராட்டி எழுதிய பாங்கு என்னை மிகவும் நெகிழ வைத்தது. சாதாரணமாக ஒரு நட்புப் பத்திரிகையின் தோழமை வியப்புக்குரியது அல்ல. ஆனாலும், இந்த விருது பற்றிச் சில வகுப்புவாதிகள், சில தமிழ் வியாபாரிகள் மேற்கொண்ட அணுகுமுறை விருதுக்குள்ளான எனது “வேரில்