பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

சு. சமுத்திரம் ☐

என்று புகார் மனுக்களை எழுத விட்டார்கள். அந்த ஆசாமியின் கடிதங்களுக்கு விளக்கம் கொடுக்கவே எனக்கு நேரம் போதவில்லை. போதாக்குறைக்கு இந்த கான்ட்ராக்ட் ஆசாமியின் சட்டகர் மத்திய அரசின் பிரசுரத்துறையில் துணை இயக்குநர். எனது நிலைய இயக்குநர் எம்.எஸ். கோபாலுக்கு என் மீது அனுதாபம் இருந்தாலும், அதைவிட பயம் அதிகம். சக்தி வாய்ந்த மேலதிகார வாய்மொழி உத்தரவுகளுக்கு அடங்கிப் போனார். ஆனாலும் நான் விட்டுக் கொடுக்கவில்லை. ஒப்பந்த விதிகளின்படி பிரிண்டருக்கு கடுமையான அபராதம் விதித்து, ‘கமாண்டோ’ நடவடிக்கைகளில் இறங்கினேன். இறுதியில் அந்தப் பத்திரிகை கோவையில் உள்ள அரசு அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்தான் ‘வேரில் பழுத்த பலா’, பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த பழைய அனுபவத்தை சமூக நோக்கோடு அணுகி விஞ்ஞான ரீதியாகப் பரிசீலித்து, அதை ஒரு நாவலாக வடிவம் கொடுத்தேன். இந்த நாவல் விமர்சனம் செய்யப்பட்டால், நம் சமூகத்தின்முன் இப்போதும் பூதாகரமாக வியாபித்திருக்கும் வகுப்பு பிரச்னைகளையும் வர்க்கப் பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு கொள்ள உதவும். ஆனால் அவர்களோ நிஜத்தை விட்டு நிழலை அடிக்கிறார்கள். நிழலை அடிப்பவன், எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

புதுதில்லியில் சாகித்ய அகாதமியில் நான் ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. தில்லித் தமிழ்ச்சங்கம், பாவேந்தர், பாரதிதாசன் பாசறை,