☐ எனது கதைகளின் கதைகள்
169
சந்திப்புமுனை போன்ற அமைப்புகள் எனக்கு சிறப்பான வரவேற்பை அளித்தன. தமிழில் சாகித்ய அகாதமி பெற்ற ஒருவருக்கு இப்படி எல்லா அமைப்புகளும் போட்டி போட்டு ஜாதி வித்தியாசம் இல்லாமல் நடந்து கொண்டது இதுவே முதல் தடவை என்று பலர் சொன்னார்கள்.
எழுத்தாளன்தான், கதாபாத்திரங்களைத் தீர்மானிப்பான். ஆனால், பரிசுக்குப் பிறகு ஏற்பட்ட விமர்சன அமளியில் தேசிய வாதியான நான் வகுப்புவாதியாகாமல் விஞ்ஞானபூர்வமாக நடந்து கொண்டதற்கு நான் உருவாக்கிய சரவணன் என்ற பாத்திரம் ஒரு காரணம். ஒரு பாத்திரமே படைப்பாளனின் போக்கைத் தீர்மானிப்பது ஒரு அதிசயந்தான். ஆனாலும் உண்மை.
இந்த உணர்வை உணர்த்துவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு பின்புல சக்தியாக விளங்கியது. செம்மலர் பத்திரிகை எனக்கு வாழ்த்து தெரிவித்ததோடு என்னை தண்டித்த கனையாழியை கண்டித்து எழுதியது. த.மு.எ.ச. தலைவர்களான தோழர்கள் கே.எம். முத்தையா, செந்தில்நாதன், அருணன், எஸ்.ஏ. பெருமாள் எனக்கு பக்கபலமாக நின்றார்கள். தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம் எனக்குப் பாராட்டு விழா நடத்தியது. தமிழ்நாடு காங்கிரஸ் (ஐ) கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும், மக்களின் மரியாதைக்குரிய ஜி.கே. மூப்பனாரும் எனக்குத் தனித்தனியே விழா நடத்தி கௌரவித்தார்கள். கவிஞர் இளந்தேவனும் தனியாக விழா நடத்தினார். த.மு.எ.ச. கிளைகள் பலவற்றிலும்