பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

சு. சமுத்திரம் ☐

மரத்தில் கட்டி வைத்து விட்டார். ஒரு முஸ்லிமிற்கும், ஒரு கள்ளருக்கும் ஏதோ ஒரு தகராறு வந்தால், இந்த குடிக்கள்ளன், முஸ்லிம் பக்கம் நிற்பார். இவருடைய கல்யாணத்தில் அந்த முஸ்லிம் வீட்டிற்கு முதல் வெற்றிலை, அந்த முஸ்லிம் வீட்டு கல்யாணத்தில் இவருக்கு முதல் பாக்கு. இந்த செய்தி தமிழகத்தில் பெரும்பாலோருக்கு குறிப்பாக நமது எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தெரியாது. இந்த முறை, இப்போது அருகிக் கொண்டிருந்தாலும், இது மேலும் புதுப்பிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை வைத்து குடிக்கள்ளன் என்ற தலைப்பில் செம்மலரில் கதை எழுதினேன். அந்தக் கிடாரிப்பட்டியில் பார்த்தவர்களையெல்லாம் கேரக்டர்களாக்கி கதையாக்கி விட்டேன். அண்மையில் நான் எழுதிய கதைகளில் எனக்கு பிடித்த கதை இது.

எழுத வேண்டிய இன்னொரு உலகம்மை

இதே போல் பசும்பொன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அரசு கடனுதவி பெற்ற ஒரு விவசாயத் தொழிலாளரின் ஊருக்குப் போனேன். இப்படி கடனுதவி பெறுகிறவர்களுக்கு, அவர்கள் அந்தக் கடனை திருப்பிக் கட்டினாலும் கட்டாவிட்டாலும் அவர்கள் இறக்க நேரிட்டால் இந்த கடனோடு இணைந்த இன்சூரன்ஸ் பணமான மூவாயிரம் ரூபாயை கொடுக்க வேண்டும். நான் குறிப்பிடுகின்ற தொழிலாளர் பாம்பு கடித்து இறந்தவர். அரசு விதிப்படி பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு மூவாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி இரண்டு வகையில் தேறிய ஆறாயிரம் ரூபாயை, ஒரு நல்ல அதிகாரி, அவரது மனைவியைத் தேடி பிடித்து வாங்கிக்