பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

189

விபரீதத்தைச் சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை ஒரு 10 நிமிடம் காத்திருக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டு புறப்பட்டேன். ஆனால் நான் போனபோதோ, அவர் எங்கேயோ போய்விட்டார் என்ற அலட்சியமான பதில், நான் அங்கே இருந்தவர்களைச் சாடினேன். கோபமாகக் கத்தினேன். புகார் வாங்க மறுத்த ஒரு ஏட்டையாவை வாங்கித்தான் ஆக வேண்டுமென்று வற்புறுத்தினேன். வீட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட டெபுடி கமிஷனருக்கு புகார் செய்தேன். ஒரு மணி நேரத்தில் போலீஸ் நாய் வந்தது, போலீஸ் படையும் வந்தது. கைரேகை அது இது என்று என்னவெல்லாமோ எடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. டெலிபோன் செய்தாலோ முறையான பதில் கிடையாது. மேல் அதிகாரிகளுக்கு நான் புகார் செய்தேன் என்பதாலும் காவல்நிலையத்தில் கத்தினேன் என்பதற்காகவும் விபரீதத்திற்கு வித்தாகக் கூடிய ஒரு குற்றத்தைப்பற்றி காவல்துறையினர் அலட்டிக்கவில்லை. எனக்கே இப்படி என்றால் ஏழை பாளைகள் என்ன ஆவார்கள்? இதை எனது பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னபோது, அவரும் ஒரு விவாகரத்தை சொன்னார். யாரோ நான்கைந்து பேர் இரவோடு இரவாக பித்தளைப் பொருட்கள், மோட்டார் பைக் உதிரி பொருட்கள், பம்ப் செட் பாகங்கள் ஆகியவற்றை அருகே உள்ள புதரில் போட்டுவிட்டு சாவகாசமாக எடுப்பதற்காக திரும்பிப் போய்விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பர், தன்னால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும் என்று சொன்னபோது கூட அவரைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்து விட்டு