பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

191

விடுமுறையிலிருந்தால், அந்த இடத்தில் ‘கேஷ்வல்கள்’ என்ற பெயரில் வெளியாட்களை நியமிப்பார்கள். மாதம் ஆறு நாளைக்கு அன்றாட சம்பளத்தில் வைத்துக் கொள்ளலாம். எனது செக்ஷனிலே 7, 8 பட்டதாரிகளும் நான்கைந்து பியூன் வேலைக்காரர்களும், 10, 15 டைப்பிஸ்டுகளும் பணியாற்றுகிறார்கள். இந்த கேஷவல்கள் என்றாலே நிரந்தரமானவர்களுக்கு இளக்காரம். ஒரு தடவை ஒரு டைப்பிஸ்டு பெண் ஒரு பியூனைப் பார்த்து ஒரு டீ வாங்கிக் கொண்டு வரச்சொன்னபோது, “உனக்கா, கேஷ்வலுக்கா, வேற ஆளைப் பாரு” என்று பதில் வந்ததாம். எனது டெலிபோன் எஸ்.டி.டி. வசதி கொண்டது. நான் இல்லாத சமயத்தில் பலர் கேஷவல் பையனை மிரட்டி திருட்டுத்தனமாய் பல நகரங்களுக்கு டெலிபோன் செய்வதாகக் கேள்விபட்டேன். அந்தப் பையனைக் கூப்பிட்டு இத்தகைய பேர்வழிகளின் பட்டியலைக் கேட்டேன். அவன் விஷயத்தை ஒப்புக்கொண்டாலும், சொல்ல மறுத்து விட்டான். அப்படி அவன் சொல்லியிருந்தால் அவனை பாஸ் இல்லையென்று சொல்லி கேட்டில் நிறுத்தலாம். அவனுக்கு ‘பில்’ போடாமல் போகலாம். ஏதோ ஒரு திருட்டை அவன் மீது போடலாம். அவன் சொல்ல மறுத்ததால் நான் வேறுவழியின்றி அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டேன். ஆனால் அவனோ ஒருவார காலம் என் பிரிவையே சுற்றிச் சுற்றி வந்தான். உள்வாங்கிய கண்களோடு, ஒட்டிப்போன வயிற்றோடு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. என் அறைக்குள் அவனைக் கூப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை சொன்னால்தான் வேலையில் சேர்ப்பேன் என்றேன். அவனும் “டெலி