பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

203

ணக்கான கார்கள் பறந்தன. டின்னர்கள், பார்ட்டிகள். நான் கூட விமானத்தில் பறந்து போய்க் கலந்து கொண்டேன். இதே போல் மகாபலிபுரத்தில் மனித சக்தியை பயன்படுத்துவது எப்படி என்று வானொலி நிகழ்ச்சியை உருவாக்குவதற்கு, அகில இந்தியாவிலிருந்தும் திரண்டுவந்த 60 பேர், ஒரு ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னையில் போடாமல் ஏன் மகாபலிபுரத்தில் அதுவும் காட்டேஜ்களில் தங்கிக் கொண்டு போட வேண்டும் என்று நான் பொறுக்க முடியாமல் கேட்டேன். அதற்கு மனித சக்தியை பற்றி சிந்திக்க அமைதியான சூழல் தேவை என்று என் கிட்டவே ஒருவர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னார். இந்த அறுபது பேரும், இரண்டு ‘டீலக்ஸ்’ பஸ்ஸில் போயிருக்கலாம். மனிதசக்தி மாநாடாயிற்றே? அப்படி போகலாமா? நான்கைந்து அம்பாஸிடர் கார்கள் மூன்று மூன்று பேராக ஏற்றிக் கொண்டு மகாபலிபுரத்திற்குப் போய் விட்டு ‘எம்டி’யாகத் திரும்பி, பழையபடியும் மனிதச் சுமைகளை ஏற்றிக் கொண்டு போவதும் வருவதுமாக இருந்தன. வருகிறவர்களுக்கோ ஏ.ஸி.ரூம்கள், விமான டிக்கெட்டுகள். ஆலோசனைக் கூட்டமோ, வேலையில்லாத குறிப்பாக பாமர மனித சக்தியை எப்படி உருவாக்கலாம் என்பது பற்றி என்னுள் எழுந்த ஒரு ஆவேசத்தில் “சுண்டைக்காய் சுமப்பவர்கள்” என்ற தலைப்பில் அன்று இரவே, இது குறித்து ஒரு சட்டயர் கதை எழுதினேன். இப்படிப்பட்ட மாநாட்டுக்கு வருகிறவர்கள், எப்படி ஒசைப்படாமல் பரமாசாரியாரைப் பார்க்கவும். ஏழுமலையானைத் தரிசிக்கவும் போகிறார்கள் என்பதை விளக்கினேன். இத்தகைய கூட்டங்களில் டிரைவர்க