பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

சு. சமுத்திரம் ☐

இத்தகைய வரிகளையோ அல்லது கருத்துக்களையோ பிடித்துக் கொண்டு கதை எழுதுவது எனது வழக்கமல்ல. ஒரு தொடர் கதையை 12 பேர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுத வேண்டுமென்றும், அவர்களில் நான் ஒருவராக இருக்கவேண்டுமென்றும், வேறு ஒரு பத்திரிகை கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன். ஆனால் இந்தக் குமுதம் ஆரம்ப காலத்தில், என்னை உருவாக்கிய பத்திரிகைகளில் ஒன்று; லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டது. இந்த வாசக பரப்புடன் மீண்டும் ஒரு தொடர்பு ஏற்படுவதை நிராகரிக்க மனமில்லை. அதோடு நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எழுதுகிற எனக்கு இது ஒரு சவாலாக தோன்றியது. இது, இப்படி சவாலாக தெரியத் தெரிய, அதை எதிர்நோக்க வேண்டுமென்ற ஒரு வைராக்கியமும் என்னுள் ஏற்பட்டது.

ஞானமும் - பைத்தியமும்

கடற்கரையில் தனியாக உட்கார்ந்து சிந்தித்தேன். குமுதம் கொடுத்த இரண்டு வரிகளை எழுதிவிட்டு சம்பந்தமில்லாமல் கதையை வேறுபக்கம் எடுத்துக் கொண்டு போகலாம். இப்படித்தான் சுஜாதா தவிர, மற்ற எழுத்தாளர்கள், இந்த வரியை மட்டும் எழுதி விட்டு கதையை சம்பந்தமில்லாமல் எங்கோ கொண்டு போனார்கள். எனக்கோ தலைப்பை ஒட்டியே எழுத வேண்டுமென்று ஒரு எண்ணம். ஆகையால் தூக்கம் பிடிக்கவில்லை என்று பொருள் கொண்டேன். இந்தச் சந்தர்பத்தில் தூக்கம் வந்தாலும், தூங்க மனமில்லாமல் இரவில் நடமாடிய எனது உறவுக்காரப் பையன் ஒருவனின் அனுபவம் நினைவிற்கு வந்தது. பொது